அதோனிராம் ஜட்சன் ஒரு குருவானவர் வீட்டில் சிறுவர் குழு ஒன்று “ என்னுடைய சுவிசேஷத்தைப் போய் பிரசங்கி என்று கர்த்தர் சொல்லுகிறார் " என்ற பாடலைப் பாடிக் கொண்டிருந்தது . அது ஒரு ஞாயிறு பள்ளியோ ? சிறுவர்களுக்கான கூட்டமோ அல்ல . பாடலுக்குப் பின் நான்கு வயதுபையன் ஒருவன் நாற்காலியின் மீது ஏறி நின்றான் . அந்தக் கூட்டத்திற்கு மிகவும் பக்தி வினயமாக அருளுரை ஆற்றினான் . இந்தச் சிறு பிள்ளைகள் " சபை விளையாட்டு " விளையாடிக் கொண்டிருந்தார்கள் . அதில் குருவானவரின் மகனான அதோனிராம் ஜட்சன் அருளுரை ஆற்றினான் . இளமைப் பருவம் அதோனிராம் ஜட்சன் 1788-ம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் ஒன்பதாம் நாளில் பிறந்த இவர் இளமையிலேயே திறமைசாலியாக விளங்கினார். அறிவும் திறமையும் கொண்ட மாணவன் மூன்று வயதிலேயே இவர் தெளிவாகப் படிக்க கற்றுக் கொண்டார் . வேதப் புத்தகத்தின் ஒரு முழு அதிகாரத்தையும் ஒரு நாள் இவர் வாசிக்கக் கேட்ட இவர் தந்தை பெரும் வியப்புக்குள்ளானார் . கணிதத்தில் அவரு