முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சார்லஸ் தியோபிலஸ் எட்வர்ட் ரேனியஸ்

 

  சார்லஸ் தியோபிலஸ் எட்வர்ட் ரேனியஸ்



(Charles Theopilus Edward Rhenius)

1790 - 1883


'திருநெல்வேலியின் அப்போஸ்தலன்' என்று அழைக்கப்படும் ரேனியஸ் 05 நவம்பர் 1790 அன்று ஜெர்மனியிலுள்ள கிரௌடென்ஸ் என்னும் ஊரில் பாரசீக இராணுவ அதிகாரியான ஓட்டோ கோட்லிப் நிகோலஸ் ரேனியஸ் என்பவரின் மகனாகப் பிறந்தார். ஆறு  வயதிலே தந்தையை இழந்தார். தனது பதினான்கு வயதில் பள்ளிக்கு செல்ல இயலாத நிலை உண்டாகவே, தனது மாமா ஒருவரின் அலுவலகத்தில் வேலை செய்துவந்தார். மூன்று ஆண்டுகள் அங்கு பணிபுரிந்த பின்னர், பெரிய நில உரிமையாளரான சார்லஸின் மற்றும் ஓர் மாமா தன்னுடன் வந்து தங்கியிருக்குமாறு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பினை ஏற்று அந்த மாமாவின் வீட்டிற்குச் சென்று தனது வாழ்க்கையைத் தொடங்கினார் சார்லஸ்.  அந்த மாமாவின் வீட்டில் அநேக மிஷனரி பத்திரிக்கைகள் வந்துகொண்டிருந்தனளூ அவைகளை வாசித்த சார்லஸ், கடல் கடந்து சென்று சுவிசேஷம் அறிவிக்க தேவன் தன்னை தெரிந்துகொண்டதை உணர்ந்து மிஷனரியாக ஒப்புக்கொடுத்தார். சார்லஸ்-ன் இந்த முடிவை அவரது மாமா விரும்பாவிட்டாலும், அதனை ஏற்றுக்கொண்டார். என்றபோதிலும், அந்த தீர்மானத்திலிருந்து சார்லஸ்-ஐ மாற்ற முயற்சித்தார். குழந்தை பாக்கியமற்றவராக அவர் இருந்ததால், தனது சொத்துக்கள் அனைத்தையும் சார்லஸ் பெயரில் விட்டுச் செல்ல விரும்பியிருந்தார் சார்லஸ்-ன் மாமா. சார்லஸ் பெர்லின் நகரில் உள்ள மிஷனரி கல்லூரிக்குச் சென்று இறையியல் கற்றார். வீடு திரும்பியதும் தனது முடிவை குடும்பத்தினருக்கு தைரியமாக எடுத்துச் சொன்னார். 'கடல் கடந்து செல்லவேண்டாம்' என்று சார்லஸ்-ன் தாய் சொன்னபோது, 'தேவன் என்னை அனுப்பினால் என்ன செய்யமுடியும்' என்ற பதிலுரைத்தார். தாய் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறார் என்று சகோதரன் எழுதி அனுப்பியபோதிலும், கர்த்தருக்குத் தனது வாழ்க்கையை ஒப்புக்கொடுத்து பின்னிட்டுப் பாராது புறப்பட்டு இந்தியா வந்தார். பின்னர், 1814-ம் ஆண்டு தரங்கை வந்து சேர்ந்தார். 

இந்தியாவிற்கு வந்த Church Mission Society (C.M.S) யின் முதல் மிஷனரி இவர். தரங்கையில் ஐந்து மாத மொழி பயிற்சியைப் பெற்று பின்னர் சென்னைக்கு அனுப்பப்பட்டார். சொற்களுக்கிடையே இடைவெளி விட்டு எழுதும் பழகத்கத்தையும், எளியவரும் புரிந்துகொள்ளும் வசனநடையையும் உருவாக்கியவர் ரேனியஸ். பப்ரீரியஸ் திருப்புதல் எளியோரால் புரிந்துகொள்வதற்குக் கடினமாயிருந்ததால், இவர் ஒரு புதிய மொழிபெயர்ப்பைத் தொடங்கினார். சொல்லுக்குச் சொல்லாக அப்படியே மொழிமாற்றம் செய்யாமல், கருத்து மொழி பெயர்ப்பாக செய்தார். கீழ் ஜாதியினருக்குக் கல்வி கற்கும் உரிமை இல்லை என்ற காலத்தில், அவர்களுக்கும் கல்வி கற்பிக்க பள்ளிகள் பல தொடங்கினார். பின்னர், சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு ஊழியம் செய்ய அனுப்பப்பட்டார். திருநெல்வேலியைச் சுற்றிய கிராமங்கள் எங்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்துவந்தார். இவர் இங்கு பணிபுரிந்த காலத்தில் பலர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர்ளூ சபைகள் வளர்ந்தன. எவ்விதம் வேதாகமம் மொழிபெயர்க்கப்படவேண்டும் என்று இவர் கூறிய கருத்துக்களை இவரது சமகாலத்தவர் ஏற்றுக்கொள்ளாமல் விமர்சித்தாலும், இவரது மரணத்திற்குப் பின்பு அவை ஏற்றுக்கொள்ளப்பட்டன. நற்செய்தியை கைத்தாள் பிரதி மூலம் பலருக்கு விநியோகித்தார். பல கல்வி நூல்களையும், பக்தி நூல்களையும் இயற்றினார். சிறைச்சாலை கைதிகளைக் கண்டு அவர்களுக்குக் கைத்தொழில் கற்றுக்கொடுக்கும் பணியையும் செய்தார். 1820 முதல் 1835 வரை ரேனியஸின் வாழ்க்கை வரலாறே திருநெல்வேலி திருச்சபையின் வரலாறு எனப் பெரியோர் சொல்வதுண்டு. பாளையங்கோட்டையிலுள்ள கத்தீட்ரல் ஆலயத்தைக் கட்டி எழுப்பியதுடன், மேலும் 371 சபைகளை ஸ்தாபித்துள்ளார். 

புதிதாகக் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களுகு;கு ஏற்பட்ட துன்பங்களிலிருந்து அவர்களைக் காப்பதற்காக பல கிறிஸ்தவ சிற்றூர்கள் இக்காலத்தில் அமைக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக ஜெர்மனி நாட்டு டோனா பிரபுவின் நிதி உதவியோடு 1827-ம் ஆண்டு புலியூர்குறிச்சி என்ற கிராமத்தை ரேனியஸ் வாங்கி அங்கே கிறிஸ்தவர்களைக் குடியேற்றி அதற்கு டோனாவூர் என்று பெயரிட்டார். 

ரேனியஸின் புதிய ஏற்பாடு முதலில் மறுக்கப்பட்டாலும் பின்பு வேதாகம சங்கத்தால் வெளியிடப்பட்டது. வேத வசனத்தின்படி தனக்குச் சரியென்று தோன்றி காரியங்களில் ரேனியஸ் உறுதியாக நின்றதால், அவருக்கும் அவரைப் பணியில் அமர்த்திய சி.எம்.எஸ் சங்கத்தாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். திருநெல்வேலி மக்கள் மீண்டும் அழைத்ததால் அங்கு சென்றார். பல பிரச்சனைகள் உருவாகின. இவரது மனைவி டச்சு நாட்டைச் சேர்ந்தவர். 

ரேனியஸ் சில நாட்கள் நோய்வாய்ப்பட்டு தான் செய்த பழைய ஏற்பாட்டுத் திருப்புதலைக் காணும் முன் 1838 ஜுன் 5 அன்று, தான் உண்மையாய் உழைத்த இயேசுவுக்குள் தனது 48-வது வயதில்; நித்திரையடைந்தார். அவரது உடல், திருநெல்வேலியில் உள்ள அடைக்கலாபுரத்தில் புதைக்கப்பட்டது. 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ரேனியஸ் ஐயர்

www.sinegithan.in  

அதோனிராம் ஜட்சன்

  அதோனிராம் ஜட்சன்  ஒரு   குருவானவர்   வீட்டில்   சிறுவர்   குழு   ஒன்று   “ என்னுடைய   சுவிசேஷத்தைப்   போய்   பிரசங்கி   என்று   கர்த்தர்   சொல்லுகிறார் "  என்ற   பாடலைப்   பாடிக்   கொண்டிருந்தது .  அது   ஒரு   ஞாயிறு   பள்ளியோ ?  சிறுவர்களுக்கான   கூட்டமோ   அல்ல .  பாடலுக்குப்   பின்   நான்கு   வயதுபையன்   ஒருவன்   நாற்காலியின்   மீது   ஏறி   நின்றான் .  அந்தக்   கூட்டத்திற்கு   மிகவும்   பக்தி   வினயமாக   அருளுரை   ஆற்றினான் . இந்தச்   சிறு   பிள்ளைகள்   " சபை   விளையாட்டு "   விளையாடிக்   கொண்டிருந்தார்கள் .  அதில்   குருவானவரின்   மகனான   அதோனிராம்   ஜட்சன்   அருளுரை   ஆற்றினான் . இளமைப்   பருவம்  அதோனிராம் ஜட்சன் 1788-ம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் ஒன்பதாம் நாளில் பிறந்த இவர் இளமையிலேயே திறமைசாலியாக விளங்கின...

ஜான் வெஸ்லி

www.sinegithan.in