முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

யோகன் பிலிப்பு பப்ரீசியுஸ்

 


 யோகன் பிலிப்பு பப்ரீசியுஸ்




(Johann Philipp Fabricius)


(1710 - 1791)


ஜெர்மனியிலுள்ள கிளிபர்க் என்னும் ஊரில் 22 ஜனவரி 1711 அன்று பப்ரீசியுஸ் பிறந்தார். ஹல்லே பல்கலைக்கழகத்தில் பயின்ற இவர், 1740-ம் ஆண்டு ஆகஸ்டு 8 அன்று கடல் மார்க்கமாக கடலூருக்கு வந்தார். சில ஆண்டுகள் தரங்கையில் பணிபுரிந்த பின்னர் சென்னை சென்றார். 

அக்காலத்தில் நடைபெற்ற போர்களின் காரணமாக பப்ரீசியுஸும் அவரது சபையினரும் பழவேற்காட்டில் அடைக்கலம் புகுந்தனர். வங்கிகள் இல்லாத அந்நாட்களில், மக்கள் தங்கள் பணத்தை பப்ரீசியுஸிடம் சேமிப்பாகக் கொடுத்துவைத்திருந்தனர். பப்ரீசியஸ் அப்பணத்தை நாவாபின் மருமகன் போன்றவர்களுக்குப் பெருங்கடனாகக் கொடுத்து, மீண்டும் பெற இயலாமற் போனதினால் பெரும் பிரச்சனைகளைச் சந்தித்தார். போர்வீரன் ஒருவன் தன் தாய்நாட்டுக்கு தற்காலிகமாக சென்றபோது தன் பணத்தை பப்ரீசியுஸிடம் கொடுத்துச் சென்றிருந்தான், அவன் திரும்பி வந்து பப்ரீசியுஸிடம் பணத்தைக் கேட்டபோது, பப்ரீசியஸினால் அப்பணத்தைக் கொடுக்க இயலாமல் போனதுளூ இதினிமித்தம் சிறைக்குள் தள்ளப்பட்டார். இது போன்ற நிகழ்ச்சிகள் பப்ரீசியஸின் வாழ்க்கையில் பெரும் துன்பங்களை விளைவித்தனளூ பல ஆண்டுகள் சிறையிலிருந்தார். பின்னர், பணத்தைக் கொடுத்துவைத்திருந்த போர்வீரனே கடனை ரத்து செய்து பப்ரீரியுஸை விடுவித்தார். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மறுநாளே, அதாவது 1971 ஜனவரி 23-ம் தேதி இறைவனடி சேர்ந்தார்.

பப்ரீசியஸ் கடுமையாக உழைப்பவர்ளூ அத்துடன் சிக்கனமான வாழ்க்கை நடத்தியவர். இந்தியா வந்தபின்பு தாய்நாடு சென்றதில்லைளூ திருமணம் செய்துகொள்ளவில்லை. மக்கள் இவரை 'சந்நியாசகுரு' என்று அழைத்தனர். தமிழ் இலக்கண நூல், தமிழ்-ஆங்கில அகராதி, ஆங்கில-தமிழ் அகராதி முதலியவற்றை இயற்றினார். ஜெர்மன் மொழியிலிருந்த கிறிஸ்தவ பக்தி பாடல்களை மொழி மாற்றம் செய்து ஞானப்பாட்டுகளாக வெளியிட்டார். இதனால் பப்ரீசியுஸுக்கு இசையமைப்பில் நாட்டம் ஏற்பட்டது. இதன் தாக்கத்தை வேதாகமத்தின் பப்ரீசியஸ் மொழி பெயர்ப்பிலும், அவரது 'தங்கத் திருப்புதலை' என்ற மொழிபெயர்ப்பினை அடிப்படையாகக்கொண்ட பவர் மொழிபெயர்ப்பிலும் காணலாம். அக்காலத்தில் இவர் வெளியிட்ட ஞானப்பாட்டு நூல்களே லுத்ரன் சபையினர் உட்பட அனைத்து சபையினராலும் பயன்படுத்தப்பட்டன. 

சீகன்பால்க்கின் மொழிமாற்றம் நற்செய்தியை எளியவருக்கும் அறிவிக்கும் நோக்கத்துடன் அவசரமாய்ச் செய்யப்பட்டது. கற்றோரால் வேதமாக மதிக்கப்பட வேண்டுமானால், வேதாகமம் இலக்கணப் பிழைகள் இல்லாமல், கண்ணியமான நடையில் இருக்கவேண்டும் என்பதை திருச்சபைத் தலைவர்கள் உணர்ந்தனர். பப்ரீசியுஸ் எபிரேயம், கிரேக்கு, லத்தீன் மொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருந்தார். சென்னையில் இருந்த நாட்களில் தமிழ், ஆங்கிலம் போர்ச்சுக்கீசியம், டச்சு மொழிகளில் அருளுரையாற்றி வந்தார். 1752-ம் ஆண்டு புதிய ஏற்பாட்டு மொழி மாற்றத்தை திருப்புதல் செய்யத் தொடங்கினார். இவரது உழைப்பினால், புதிய ஏற்பாடு தலையங்கங்கள், ஒத்தவாக்கிய குறிப்புகளுடன் 1772-ம் ஆண்டு பதிக்கப்பட்டது. இது இருபது ஆண்டு உழைப்பு. பழைய ஏற்பாட்டு மொழிமாற்றம் இன்றும் 'தங்கத்திருப்புதல்' எனப்படுகிறது. 

மூவொருமை இறைவன் பரத்தில் மட்டுமல்ல, அபரமாகிய இவ்வுலகிலும் உள்ளார் எனக்காட்ட பராபரன் (பரன்10அபரன்)என்றும் சொல்லை பயன்படுத்தினார். பழைய ஏற்பாடு முழுவதும் அச்சில் வந்து முடிந்ததைக் காணும் முன் இவர் மரணமடைந்தார். 

பப்ரீசியுஸ் மொழிபெயர்ப்பு அச்சில் வந்தபோது, வசனத்தமிழில் வெளியிடப்பட்ட நூல்களில் அதுவே பெரிய நூலாகும். 


 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ரேனியஸ் ஐயர்

www.sinegithan.in  

அதோனிராம் ஜட்சன்

  அதோனிராம் ஜட்சன்  ஒரு   குருவானவர்   வீட்டில்   சிறுவர்   குழு   ஒன்று   “ என்னுடைய   சுவிசேஷத்தைப்   போய்   பிரசங்கி   என்று   கர்த்தர்   சொல்லுகிறார் "  என்ற   பாடலைப்   பாடிக்   கொண்டிருந்தது .  அது   ஒரு   ஞாயிறு   பள்ளியோ ?  சிறுவர்களுக்கான   கூட்டமோ   அல்ல .  பாடலுக்குப்   பின்   நான்கு   வயதுபையன்   ஒருவன்   நாற்காலியின்   மீது   ஏறி   நின்றான் .  அந்தக்   கூட்டத்திற்கு   மிகவும்   பக்தி   வினயமாக   அருளுரை   ஆற்றினான் . இந்தச்   சிறு   பிள்ளைகள்   " சபை   விளையாட்டு "   விளையாடிக்   கொண்டிருந்தார்கள் .  அதில்   குருவானவரின்   மகனான   அதோனிராம்   ஜட்சன்   அருளுரை   ஆற்றினான் . இளமைப்   பருவம்  அதோனிராம் ஜட்சன் 1788-ம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் ஒன்பதாம் நாளில் பிறந்த இவர் இளமையிலேயே திறமைசாலியாக விளங்கின...

ஜான் வெஸ்லி

www.sinegithan.in