முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கிளாரா ஸ்வைன்

 

 




கிளாரா ஸ்வைன் (1834-1910)


வாய்ப்புகளும், பதவிகளும் எல்லா நேரமும் எல்லோருக்கும் கொடுக்கப்படுவதில்லை. சில வாய்ப்புகள் நம்மைத் தேடி வரும்போது நாம் அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கிறிஸ்தவ வாழ்க்கையில் உயர் பதவிகளை நாம் அடையும்போது, அப்பதவியின் மூலமாக நம்மால் இயன்ற சுவிசேஷ பணியைச் செய்வது அவசியமாகும்.

அமெரிக்க நாட்டில் பிறந்த கிளாரா_ஸ்வைன் தனக்கு கொடுக்கப்பட்ட உன்னத வாய்ப்பை சரியான முறையில், சரியான நேரத்தில் செ1870ஆம் ஆண்டு, ஆண்டவரின் அழைப்பை உணர்ந்து இந்தியா வந்தார். அந்நாட்களில் மருத்துவ மிஷனெரியாக கடல் கடந்து வந்த பெண்களில் இவரே முதன்மையானவர். இந்தியாவில் காணப்பட்ட மொழியை கற்றுக் கொள்வதில் சற்று சிரமம் ஏற்பட்டாலும், மிகுந்த வாஞ்சையுடன் அவைகளைக் கற்றார். 

1873ஆம் ஆண்டு, பெண்களுக்கான முதல் மருத்துவமனையை ஆரம்பித்தார். இது சுமார் 40 #ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. முகமதிய அரசனான #நவாப், கிறிஸ்தவர்களுக்கு எதிராக தீவிரமாய் செயல்பட்டபோதிலும், கிளாராவின் பணிகளைக் கண்ட அவர், இம்மருத்துவமனைக்கான நிலங்களை தானமாகக் கொடுத்து, கிறிஸ்தவ பணிகளை உற்சாகப்படுத்தினார்.

1880ஆம் ஆண்டு மட்டும் 7,000 க்கும் அதிகமான நோயாளிகளை இவர் பராமரித்தார். மேலும் தாதியர் பயிற்சி நிலையங்களை ஏற்படுத்தி, அநேக அர்ப்பணிப்புள்ள கிறிஸ்தவ விசுவாசத்தில் வளர்க்கப்பட்ட தாதியர்களை உருவாக்கினார்.

1885ஆம் ஆண்டு, ராஜ் புட்னாவை ஆண்டு வந்த அரசியின் விசேஷ மருத்துவராகப் பணி செய்தார். தனக்குக் கிடைத்த இம்மாபெரும் பதவியைப் பயன்படுத்தி, அவ்விடத்திலுள்ளோர் கிறிஸ்துவின் அன்பைக் கண்டு கொள்ள மிகுந்த பிரயாசங்களை மேற்கொண்டு, கிறிஸ்துவின் நற்செய்தியை எடுத்துரைத்து, சிறந்த மிஷனெரியாகத் தன்பணியை நிறைவேற்றினார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ரேனியஸ் ஐயர்

www.sinegithan.in  

அதோனிராம் ஜட்சன்

  அதோனிராம் ஜட்சன்  ஒரு   குருவானவர்   வீட்டில்   சிறுவர்   குழு   ஒன்று   “ என்னுடைய   சுவிசேஷத்தைப்   போய்   பிரசங்கி   என்று   கர்த்தர்   சொல்லுகிறார் "  என்ற   பாடலைப்   பாடிக்   கொண்டிருந்தது .  அது   ஒரு   ஞாயிறு   பள்ளியோ ?  சிறுவர்களுக்கான   கூட்டமோ   அல்ல .  பாடலுக்குப்   பின்   நான்கு   வயதுபையன்   ஒருவன்   நாற்காலியின்   மீது   ஏறி   நின்றான் .  அந்தக்   கூட்டத்திற்கு   மிகவும்   பக்தி   வினயமாக   அருளுரை   ஆற்றினான் . இந்தச்   சிறு   பிள்ளைகள்   " சபை   விளையாட்டு "   விளையாடிக்   கொண்டிருந்தார்கள் .  அதில்   குருவானவரின்   மகனான   அதோனிராம்   ஜட்சன்   அருளுரை   ஆற்றினான் . இளமைப்   பருவம்  அதோனிராம் ஜட்சன் 1788-ம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் ஒன்பதாம் நாளில் பிறந்த இவர் இளமையிலேயே திறமைசாலியாக விளங்கின...

ஜான் வெஸ்லி

www.sinegithan.in