Skip to main content

William Tyndale

வில்லியம் டின்டேல்
William Tyndale

டின்டேலின் மொழி பெயர்ப்பைப் பயன்படுத்திஎழுதப்பட்ட வேதம் King James Version). “அவர்கள் என்னையும்கூட எரிப்பார்கள்.கர்த்தருக்கு விருப்பமானால் அதுவும் நடக்கட்டும்...

இங்கிலாந்தில் சபை சீர்திருத்தம் ஏற்பட முக்கிய காரணமாக இருந்தது வேதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பே. ஆங்கிலத்தில் வேதம் மொழி பெயர்க்கப்பட்டு அதிவேகமாக மக்களுடைய கரங்களைஎட்டியதும் அவர்களுடைய இருண்டிருந்த ஆத்மீகக் கண்கள் திறக்கத் தொடங்கின. ஆங்கிலத்தில்வேதத்தை மொழிபெயர்க்கும் பணியை ஆரம்பித்து வைத்தவர் வில்லியம் டின்டேல். ஏழு மொழிகளைப்பேசும் வல்லமை கொண்டிருந்த டின்டேல் எபிரேய, கிரேக்க மொழிகளில் அதிக பாண்டித்தியம்உள்ளவராக இப்பணிக்குத் தகுந்தவராக இருந்தார்.

குளொஸ்டர் என்னும் இடத்தில் 1495 அளவில் பிறந்த டின்டேல் 1510 – 1521 வருடங்களில் ஒக்ஸ்பர்ட்,கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்களில் பயின்றார். இக்காலத்தில் அநேக மதகுருக்களுக்கு வேத அறிவேஇல்லாமலிருந்ததை உணர்ந்த டின்டேல், ஊர்ப் பையனும் வாசித்துப் புரிந்து கொள்ளும் வகையில்ஆங்கிலத்தில் வேதத்தைத் தன் நாட்டு மக்களுக்கு அளிக்கத் தீர்மானித்தார்.

ஆனால் அன்று அதிகாரத்தைத் தன் கரத்தில் வைத்திருந்த ரோமன் கத்தோலிக்க சபை ஆங்கிலத்தில்மட்டுமல்ல, வேறு எந்த மொழியிலும் வேதத்தை மொழி பெயர்க்க அனுமதி தராது என்பதை அவர்அறிந்திருந்தார். அவ்வாறு வேதத்தை இலத்தீன் மொழியில் இருந்து இன்னுமொரு மொழியில் மொழிபெயர்ப்பது சட்டத்திற்கு எதிரான செயலாக இல்லாமலிருந்தாலும் அக்காலத்தில் ஆண்டவருடையஜெபத்தையும், பத்துக் கட்டளைகளையும், அப்போஸ்தலருடைய விசுவாச அறிக்கையையும்தங்களுடைய பிள்ளைகளுக்கு ஆங்கிலத்தில் போதித்த காரணத்திற்காக ஏழு பேர் உயிரோடுஎரிக்கப்பட்டிருந்தனர்.

மதகுரு ஒருவருடைய துணையும் பாதுகாப்பும் இல்லாமல் மொழி பெயர்ப்பு வேலையில் ஈடுபடமுடியாதென்று உணர்ந்த டின்டேல் லண்டன் பிசப் டன்ஸ்டலின் துணையை நாடி லண்டனுக்கும் 1523இல்சென்றார். ஆனால் அரச நிலவரங்களால் அத்தகைய உதவியை அளிக்க பிசப் டன்ஸ்டல் தயங்கினார்.இங்கிலாந்தில் இருந்து மொழிபெயர்ப்பு வேலையில் ஈடுபடுவது முடியாத காரியமென்று உணர்ந்தடின்டேல் 1524 இல் ஜெர்மனிக்குப் போகத் தீர்மானித்தார். அரசருடைய அனுமதியையும் பெறாமல்ஜெர்மனியில் விட்டன்பர்க் என்ற இடத்தை அடைந்தார் டின்டேல். ஜெர்மனியை அடையுமுன்இரகசியமாக புதிய ஏற்பாட்டை மொழிபெயர்த்து முடித்திருந்தார் டின்டேல். விட்டன்பர்க்கில் இருந்துகொலோனை அடைந்த டின்டேல் தனது மொழிபெயர்ப்பை அச்சிடும் பணியில் ஈடுபட்டார்.

அச்சுப்பணி பாதி முடியுமுன்பே அது அச்சிடப்படுகின்றது என்பதை அறிந்த கத்தோலிக்கர்கள்டின்டேலுக்கு பெருந்துன்பத்தை விளைவித்தனர். இதனால் கொலோனில் இருந்து தனது மொழிபெயர்ப்போடு எதிரிகளிடம் இருந்து தப்பி டின்டேல் வேர்ம்ஸ் என்ற இடத்தை அடைந்தார். அங்கேஇறுதியாக தனது வேத மொழி பெயர்ப்பை அச்சிட்டு முடித்தார். வேர்ம்ஸிலேயே டின்டேலின் முதல் புதியஏற்பாட்டுப் பிரதி வெளியானது.

அரசனுடையதும், அதிகாரிகளுடையதும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் மீறி இப்புதிய ஏற்பாடுஇங்கிலாந்தை 1526 இல் அடைந்தது. ஜெர்மனியில் இருந்த இங்கிலாந்து வியாபாரிகள் மூலமாகடின்டேலின் புதிய ஏற்பாடு கடத்தப்பட்டு இங்கிலாந்தின் நகரங்கள், கிராமங்கள் எல்லாம்பரவத்தொடங்கியது. பிசப் டின்ஸ்டல் இப்பிரதிகளைக் கைப்பற்றி அழிக்க பெரு முயற்சி செய்தார். இதைக்கேள்விப்பட்ட டின்டேல், “புதிய ஏற்பாட்டை எரிப்பதன் மூலம் நான் எதிர்பார்க்காததை அவர்கள்செய்துவிடவில்லை; அவர்கள் என்னையும்கூட எரிப்பார்கள். கர்த்தருக்கு விருப்பமானால் அதுவும்நடக்கட்டும்” என்றார்.

இவ்வெதிர்ப்புகள் எல்லாவற்றிற்கும் மத்தியில் ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட பிரதிகள், அதன்மறுபதிப்புகள், திருத்தப்பதிப்புகள் என்று டின்டேலின் புதிய ஏற்பாடு இங்கிலாந்தின் நாடு நகரங்கள்எல்லாம் பரவத் தொடங்கியது. கத்தோலிக்க மதகுருக்கள் இதைத் தடுப்பதற்கு ஒரு வழி கண்டுபிடித்தனர்.பணம் கொடுத்து அனைத்துப் பிரதிகளையும் வாங்கினால் அவை மக்களை அடைவதைத்தடுத்துவிடலாம் என்று முடிவு செய்து அவ்வாறே செய்தனர். இதனால் இப்பிரதிகளை இங்கிலாந்திற்குக்கொண்டு வந்த வியாபாரிகளால் நன்றாகப் பணம் சம்பாதிக்க முடிந்தது. மதகுருக்கள் எரிப்பதற்கும் அதிகபுதிய ஏற்பாடுகள் கிடைத்தன. டின்டேல் புதிதாக ஒரு திருத்திய புதிய ஏற்பாட்டை வெளியிடுவதற்குத்தேவையான பணமும் கிடைத்தது. இப்புதிய ஏற்பாடு என்றுமில்லாத வகையில் இங்கிலாந்து மக்களின்கண்களுக்கும் காதுகளுக்கும் நல்ல வேத விருந்தளித்தது.

1611 இல் இங்கிலாந்தில் வெளியிடப்பட்டு இன்றும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் கிங் ஜே ம்ஸ்வேதம் (King James Version) தொண்ணூறு வீதம் டின்டேலின் மொழி பெயர்ப்பைப் பயன்படுத்திஎழுதப்பட்டது. டின்டேல் தனது எதிரிகளின் கரங்களில் பிடிபடாமல் தொடர்ந்து எழுதியும், மொழிபெயர்ப்புவேலைகளைத் தொடர்ந்தும் வந்தார். இறுதியில் அவர் சிறைபிடிக்கப்பட்டு பிரசல்ஸில் ஒருகோட்டையில் வைக்கப்பட்டார். சிறை பிடிக்கப்பட்டு பதினாறு மாதங்களுக்குப் பின்பு ஆகஸ்ட் 1536 இல்டின்டேலுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தன் செயல்களுக்காக மன்னிப்பு கேட்கும்படி டின்டேலைஅவரது எதிரிகள் வற்புறுத்தினர். அக்டோபர் மாதத்தில் கத்தோலிக்கர்கள் டின்டேலை சித்திரவதை செய்துஉயிரோடு எரித்தனர். இறப்பதற்கு முன் டின்டேல், இங்கிலாந்து அரசரின் கண்கள் திறக்க வேண்டும் என்றுஜெபித்து மடிந்தார்.

சத்தியத்திற்காக தங்கள் உயிரைப்பலி கொடுத்த அநேக கிறிஸ்தவர்களில் டின்டேலும் ஒருவர். வேதத்தைநாம் கையிலெடுக்கும் ஒவ்வொரு வேளையும் அவ்வேதத்திற்காகவும், சத்தியத்திற்காகவும் தம்உயிரைத் தந்த டின்டேலை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்

Comments

Popular posts from this blog

கிளாரா ஸ்வைன்

    கிளாரா ஸ்வைன் (1834-1910) வாய்ப்புகளும், பதவிகளும் எல்லா நேரமும் எல்லோருக்கும் கொடுக்கப்படுவதில்லை. சில வாய்ப்புகள் நம்மைத் தேடி வரும்போது நாம் அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கிறிஸ்தவ வாழ்க்கையில் உயர் பதவிகளை நாம் அடையும்போது, அப்பதவியின் மூலமாக நம்மால் இயன்ற சுவிசேஷ பணியைச் செய்வது அவசியமாகும். அமெரிக்க நாட்டில் பிறந்த கிளாரா_ஸ்வைன் தனக்கு கொடுக்கப்பட்ட உன்னத வாய்ப்பை சரியான முறையில், சரியான நேரத்தில் செ1870ஆம் ஆண்டு, ஆண்டவரின் அழைப்பை உணர்ந்து இந்தியா வந்தார். அந்நாட்களில் மருத்துவ மிஷனெரியாக கடல் கடந்து வந்த பெண்களில் இவரே முதன்மையானவர். இந்தியாவில் காணப்பட்ட மொழியை கற்றுக் கொள்வதில் சற்று சிரமம் ஏற்பட்டாலும், மிகுந்த வாஞ்சையுடன் அவைகளைக் கற்றார்.  1873ஆம் ஆண்டு, பெண்களுக்கான முதல் மருத்துவமனையை ஆரம்பித்தார். இது சுமார் 40 #ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. முகமதிய அரசனான #நவாப், கிறிஸ்தவர்களுக்கு எதிராக தீவிரமாய் செயல்பட்டபோதிலும், கிளாராவின் பணிகளைக் கண்ட அவர், இம்மருத்துவமனைக்கான நிலங்களை தானமாகக் கொடுத்து, கிறிஸ்தவ பணிகளை உற்சாகப்படுத்தினார். 1880ஆம் ஆண்டு மட்டும் 7,000 க்கு

சீகன்பால்கு

    மிஷனரி சீகன்பால்கு  தெற்கு ஆசியாவிலே முதன் முதலாவதாக மொழி பெயர்க்கப்பட்டு அச்சிடப்பட்ட வேதாகமம் தமிழ் வேதாகமே. இச்சிறப்பைத் தமிழ் மொழிக்கு அளித்தவர் சீகன்பால்கு என்னும் ஜெர்மன் நாட்டவர். இவரது தாயார் கர்தினா தான் சாகும் முன் தனது பிள்ளைகளை அழைத்து, 'இவ்வுலகில் உங்களைத் தனியாக விட்டுச் செல்லும் நான் உங்களுக்கு மிகப்பெரிய செல்வம் ஒன்றை தருகிறேன்; அதை என் வேதபுத்தகத்திலே கண்டடைவீர்கள். அதன் ஒவ்வொரு பக்கத்தையும் என் கண்ணீரால் நனைத்திருக்கிறேன்' என்றார். அப்போது சீகன்பால்குக்கு வயது ஆறு. இரு ஆண்டுகளுக்குப் பின் தந்தையும் மரணமடைந்தார். டென்மார்க்கு அரசர் நான்காம் பிரெடரிக் சீகன்பால்கையும் அவரது நண்பர் புளுட்சோவையும் நற்செய்திப்பணி செய்ய தரங்கை அனுப்பினார். இவ்விருவரும் 1706-ம் ஆண்டு ஜுலை 9-ம் தேதி டேனிஷ் வந்தனர். வந்தது முதல் மரணம் மட்டும் பலவித பாடுகளுக்கும் இன்னல்களுக்கும் உள்ளானார். 'கடவுளைப் பற்றி எல்லா சித்தார்த்தங்களையும் அறிந்திருக்கிறேன் என்பது மட்டும் போதாது, கடவுளுக்கும் எனக்கும் சரியான தொடர்பு உள்ளது' என்பதையே மதிக்கிறேன் என்ற கொள்கையுடைய கிறிஸ்தவ பக்தி இயக்கத்