Skip to main content

ஜாண் பனியன்

 

ஜாண் பனியன்


இங்கிலாந்திலுள்ள பெட்போர்டு என்ற இடத்தில் ஜாண் பனியன் 1628-ம் ஆண்டு நவம்பர் மாதம் பிறந்தார்இவரது பெற்றோர் கிறிஸ்தவர்கள் அல்லர்சிறுவயதில் தனது மூதாதையரின் தொழிலான பாத்திரங்களைப் பழுது பார்த்து விற்பனை செய்யும் தொழிலைையே இவரும் தனது தந்தையுடன் சேர்ந்து செய்து வந்தார்ஏழைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால் உயர்கல்வி பெற இவருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லைவீட்டின் பொருளாதாரத் தேவையைச் சந்திக்க பள்ளிப்படிப்பை இடையிலே விடவேண்டியிருந்தது.

தனது இளம்பிராயத்தில் ஒரு தீய மனிதனாகவே வளர்ந்தார்பொய் சொல்லவும்மற்றவர்களை ஏமாற்றவும்பெரியவர்களை மதிக்காமலும் இருந்தார்வாழ்க்கையில் நிம்மதியில்லாமல் போகவே தனது 16 வயதிலேயே இராணுவத்தில் சேர்ந்தார்இரண்டு வருடம் இராணுவ வீரனாக பணியாற்றிக் கொண்டிருந்தபோதுஇவரது தாயாரும் சகோதரியும் இறந்துவிட்டனர்எனவே இவருக்கு வாழ்வில் ஆர்வம் இல்லாமல் போனதுஅதோடு ஒருமுறை அரசாங்க ஆணைப்படிஇவர் எல்லையில் நடைபெறும் போருக்குச் செல்லப் பணிக்கப்பட்டார்அதற்கு அவர் ஆயத்தமாகி வரும் நிலையில்கடைசி நேரத்தில் இவருக்குப் பதிலாக வேறொரு நபர் அனுப்பப்பட்டார்அந்நபர் போரின் முதல் நாளே சண்டையில் மரணமடைந்தார்இந்த நிகழ்ச்சி ஜாணை அதிகமாகச் சிந்திக்க வைத்தது மயிரிழையில் தான் உயிர் தப்பினது ஏனோ என்று சிந்திக்கத் தொடங்கினார்.

இரண்டாண்டுகள் மட்டும் ராணுவத்தில் பணியாற்றி திரும்பிய இவர் தனது 19-வது வயதில் ஒரு விசுவாசியான கிறிஸ்தவப் பெண்ணைத் திருமணம் செய்தார்அவள் அடிக்கடி கிறிஸ்துவைப் பற்றி ஜாணிடம் பேசுவாள்அவளைப் பிரியப்படுத்த ஜாண் கோயிலுக்குப் போகவும்சில கெட்ட காரியங்களை விடவும் ஆரம்பித்தார்ஆனால் முற்றிலும் ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்க மனமில்லை இந்நிலையில் ஒருநாள் தெருவில் பாத்திரங்கள் பழுதுபார்க்கப்படும் என்று கூவிக்கொண்டே சென்றபோது வழியில் மூன்று பெண்கள் இயேசு கிறிஸ்துவைப்பற்றி சொல்லிக்கொண்டிருப்பதை நின்று கவனிக்க ஆரம்பித்தார்அவர்கள் மூலம் சுவிசேஷத்தைக் சென்று  கேட்ட ஜாண்வீட்டில் வேதத்தை அதிகமாக வாசிக்க ஆரம்பித்தார்வேதத்தை வாசிக்க வாசிக்க தான் ஒரு பாவி என்று அதிகம் உணர்த்தப்பட்டார்ஒருநாள் அதிக ககவீனப்பட்டுசோர்வுடன் இருந்தபோது மார்ட்டின் லுத்தரின் புத்தகத்தைப் படித்த போதுதன்னைக் கிறிஸ்துவுக்கு முற்றிலும் ஒப்புக்கொடுத்தார்.

ஆண்டவரை ஏற்றுக்கொண்ட கொஞ்ச நாட்களிலே ஜாண் பனியனின் அன்பு மனைவி இறந்துபோனார்அதிக வேதனையுற்ற  ஜாண் பனியன் தனது இரட்சகர் மட்டுமே இறுதிவரை தனக்கு உதவி செய்ய முடியும் என்று நன்கு உணர்ந்துகொண்டார்தனது வாழ்வை அவருக்கு சமூலமாய் அர்ப்பணித்து,ஆண்டவருக்குத் தன்னால் இயன்றதைச் செய்ய முன்வந்தார்பாத்திரங்களைப் பழுதுபார்க்கும் வீடுகளில் தனது தொழிலைச் செய்து கொண்டே இயேசுவையும் அறிவிக்க ஆரம்பித்தார்இவரது ஊழியத்தின் மூலம் பலர் ஆண்டவரை ஏற்றுக் கொண்டதோடு மட்டுமல்லாமல்இவரது வியாபாரமும் நன்கு வளர்ந்தது.

இந்தக்காலத்தில் இங்கிலாந்து தேசத்தில் போதகர்கள் தவிர மற்ற எவரும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கக்கூடாது என்றொரு சட்டம் இருந்ததுஇதனை அறிந்த ஜாண் மாற்கு 16:15-ம் வசனத்தைப் படித்து (நீங்கள் உலகமெங்கும் போய்சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்இதற்கு கீழ்ப்படிவதே உன்னதம் என்று உணர்ந்துசுவிசேஷத்தைப் பிரசங்கித்துவந்தார்சில வருடத்திற்குப் பின் இதே சட்டம் கடுமையாகப் பின்பற்றப்பட்டு போதகர் அல்லாத வேறு யாராவது சுவிசேஷத்தைப் பிரசங்கித்தால் சிறைச்சாலையில் போடப்பட்டதோடுகடுமையாகத் தண்டிக்கப்பட்டனர்ஜாண் நாட்டின் சட்டத்தை மீற விரும்பாவிட்டாலும் தேவனுக்குக் கீழ்ப்படிதலை தனது வாழ்வில் முதன்மை யாகக் கருதினார்எனவே தனது ஊழியத்தை அவர் நிறுத்தவில்லை.

ஒருநாள் ஒரு கிராமத்தில் சுவிசேஷத்தை பிரசங்கிக்க மக்கள் இவரை அழைத்தபோது அதனை அறிந்த காவல் துறையினரும் வந்து காத்திருக்கஜாண் தனது பிரசங்கத்தை ஆரம்பித்தவுடனே காவலரால் சிறைப்பிடிக்கப்பட்டு நீதிபதியின் முன் நிறுத்தப்பட்டார்நீதிபதி இவரிடம் இனி சுவிசேஷத்தை பிரசங்கிக்க மாட்டேன் என்று உறுதி கூறினால் உன்னை விடுவிக்கிறேன் என்று கூறினார்ஆனால் அப்படி உறுதியளிக்க ஜாண் பனியன் முன் வரவில்லைமுதலில் 3 மாத சிறைத் தண்டனை அவருக்கு அளிக்கப்பட்டதுஅதற்கு பதிலுரைத்த ஜாண் பனியன் "இன்று நான் விடுவிக்கப் பட்டால்தேவ உதவியால் நாளை பிரசங்கிப்பேன்என்றார்எனவே அவரது சிறையிருப்பு 3 மாதத்தில் முடியாமல் 12 வருடமாக நீடித்ததுஇந்த 12 வருடத்தில் எந்த நேரத்திலும் அவருக்கு விடுதலை கிடைக்கும் ஆனால் ஒரே ஒரு நிபந்தனைஅதாவது நான் இனி பிரசங்கிக்கமாட்டேன்  என்ற ஒரே ஒரு உறுதிமொழி அவர் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டது.

சிறிய இருண்ட அறையில் 50 பேருடன் இவர் தங்கவேண்டியிருந்ததுஇதனால் நோய்கள் வேகமாகப் பரவிபலர் அதே அறையில் மரித்தனர்தனது குடும்பத்தையும் நான்கு பின்ளைகளையும் பிரிந்து வெளி உலகத்தையே பார்க்காமல் 12 வருடம் சிறையில் கழித்தது கஷ்டமாக இருந்தாலும்  ஆண்டவரை அதிகம் நேசித்ததால்அதனை சகித்தார்சிறையில் இவருடன் கொலைகாரர்கள்துஷ்டர்கள் என கிறிஸ்துவை அறியாதவர்கள் இருந்தனர்இவர்களுக்கு சுவிசேஷத்தைச் சொல்லிஅநேகரை நீதிக்குட்படுத்தினார்சிறையிலே இவர்கள் கூடி ஜெபிக்க ஆரம்பித்தனர்சிறையில் ஒரு நிமிடமும் வீணாக்காமல் வேத வசனத்தை வாசிப்பது ஜெபிப்பதுஎழுதுவது என்று செலவழித்தார்அங்குதான் அவர் 'மோட்ச பிரயாணம்என்ற தனது தலைசிறந்த புத்தகத்தை எழுதி முடித்தார்.

தனது 43-வது வயதில் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்பெட்ஃபோர்டு என்ற இடத்தில் பாப்திஸ்து திருச்சபையின் போதகராக ஊழியம் செய்ய மக்களால் அழைப்பு பெறவேஅதனை ஏற்று 16 வருடம் அங்கு ஊழியம் செய்தார்சபை போதகராக மட்டுமன்றி பல இடங்களுக்கு பயணம் செய்துகல்லூரி மாணவர்கள் மத்தியிலும்  தெருக் கூட்டங்களிலும் சுவிசேஷத்தை பிரசங்கித்தார்பல நேரங்களில் மிரட்டப்பட்டதோடுமறுபடியும் சிறைவாசம் செல்ல வேண்டியிருந்ததுஎனினும் சோர்ந்து போகாமல் சுவிசேஷத்தை பிரசங்கித்தார்.

தனது சபை அங்கத்தினர்களின் குடும்பகளிலுள்ள பிரச்சனைகளை தீர்த்துஅம்மக்களை கிறிஸ்துவுக்குள் ஊன்றக்கட்டும்  பணியிலும் அதிகம் ஈடுபட்டார்ஓடிப்போன ஒரு மகனைஅவனது குடும்பத்துடன் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு உழைத்த போது கொட்டும் மழையிலும் கடினமான 40 மைல் பிரயாணம் மேற்கொண்டார்மழையில் அதிகம் நனைந்ததால்சுகவீனப்பட்டு 1688-ம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதிதனது 59-வது வயதில் மரித்துபூமியில் தான் ஆசையாய் சேவித்த ஆண்டவரை பரலோகத்தில் முகமுகமாய் தரிசிக்கவும் சேவிக்கவும் சென்றுவிட்டார்.

போதகர் ஜாண் பனியன் இன்று நம்மிடம் இல்லைஆனால் அவர் உருவாக்கின மோட்சப் பிரயாணம் என்ற புத்தகம் இன்றும் அநேகரை ஆண்டவரண்டை வழி நடத்திவருகிறதுவேதப் புத்தகத்திற்கு அடுத்தபடியாக 130-க்கும்  அதிகமான மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட இப்புத்தகம் எல்லோராலும் விரும்பி வாசிக்கப்படுகிறது.தேவன் தம்முடைய பணியில் பயன்படுத்த தேவை சாமர்த்தியம் அல்லஆனால் அர்ப்பணம்சாமனியர்களைக் கொண்டு சரித்திரம் படைக்கும் ஆண்டவர் உங்களைக் கொண்டும் புதிய சரித்திரம் படைப்பார்ஆமென்



Comments

Popular posts from this blog

கிளாரா ஸ்வைன்

    கிளாரா ஸ்வைன் (1834-1910) வாய்ப்புகளும், பதவிகளும் எல்லா நேரமும் எல்லோருக்கும் கொடுக்கப்படுவதில்லை. சில வாய்ப்புகள் நம்மைத் தேடி வரும்போது நாம் அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கிறிஸ்தவ வாழ்க்கையில் உயர் பதவிகளை நாம் அடையும்போது, அப்பதவியின் மூலமாக நம்மால் இயன்ற சுவிசேஷ பணியைச் செய்வது அவசியமாகும். அமெரிக்க நாட்டில் பிறந்த கிளாரா_ஸ்வைன் தனக்கு கொடுக்கப்பட்ட உன்னத வாய்ப்பை சரியான முறையில், சரியான நேரத்தில் செ1870ஆம் ஆண்டு, ஆண்டவரின் அழைப்பை உணர்ந்து இந்தியா வந்தார். அந்நாட்களில் மருத்துவ மிஷனெரியாக கடல் கடந்து வந்த பெண்களில் இவரே முதன்மையானவர். இந்தியாவில் காணப்பட்ட மொழியை கற்றுக் கொள்வதில் சற்று சிரமம் ஏற்பட்டாலும், மிகுந்த வாஞ்சையுடன் அவைகளைக் கற்றார்.  1873ஆம் ஆண்டு, பெண்களுக்கான முதல் மருத்துவமனையை ஆரம்பித்தார். இது சுமார் 40 #ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. முகமதிய அரசனான #நவாப், கிறிஸ்தவர்களுக்கு எதிராக தீவிரமாய் செயல்பட்டபோதிலும், கிளாராவின் பணிகளைக் கண்ட அவர், இம்மருத்துவமனைக்கான நிலங்களை தானமாகக் கொடுத்து, கிறிஸ்தவ பணிகளை உற்சாகப்படுத்தினார். 1880ஆம் ஆண்டு மட்டும் 7,000 க்கு

William Tyndale

வில்லியம் டின்டேல் William Tyndale டின்டேலின் மொழி பெயர்ப்பைப் பயன்படுத்திஎழுதப்பட்ட வேதம் King James Version) . “அவர்கள் என்னையும்கூட எரிப்பார்கள்.கர்த்தருக்கு விருப்பமானால் அதுவும் நடக்கட்டும்... இங்கிலாந்தில் சபை சீர்திருத்தம் ஏற்பட முக்கிய காரணமாக இருந்தது வேதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பே. ஆங்கிலத்தில் வேதம் மொழி பெயர்க்கப்பட்டு அதிவேகமாக மக்களுடைய கரங்களைஎட்டியதும் அவர்களுடைய இருண்டிருந்த ஆத்மீகக் கண்கள் திறக்கத் தொடங்கின. ஆங்கிலத்தில்வேதத்தை மொழிபெயர்க்கும் பணியை ஆரம்பித்து வைத்தவர் வில்லியம் டின்டேல். ஏழு மொழிகளைப்பேசும் வல்லமை கொண்டிருந்த டின்டேல் எபிரேய, கிரேக்க மொழிகளில் அதிக பாண்டித்தியம்உள்ளவராக இப்பணிக்குத் தகுந்தவராக இருந்தார். குளொஸ்டர் என்னும் இடத்தில் 1495 அளவில் பிறந்த டின்டேல் 1510 – 1521 வருடங்களில் ஒக்ஸ்பர்ட்,கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்களில் பயின்றார். இக்காலத்தில் அநேக மதகுருக்களுக்கு வேத அறிவேஇல்லாமலிருந்ததை உணர்ந்த டின்டேல், ஊர்ப் பையனும் வாசித்துப் புரிந்து கொள்ளும் வகையில்ஆங்கிலத்தில் வேதத்தைத் தன் நாட்டு மக்களுக்கு அளிக்கத் தீர்மானித்தார். ஆனால் அன்று அதிகாரத்

ரேனியஸ் ஐயர்

www.sinegithan.in